பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை: தமிழ் நாட்­டில் முத­லீடு செய்­யு­மாறு டெஸ்லா நிறு­வ­னர் எலன் மஸ்க் உட்­பட உல­கின் 11 முன்­னணி மோட்­டார் வாகன உற்­பத்தி நிறு­வ­னங்­களுக்கு முத­ல­மைச்­சர் எடப்­பாடி பழ­னி­சாமி அழைப்பு விடுத்­துள்­ளார்.

உல­கப் பொரு­ளா­தா­ரச் சூழ­லில் கொரோனா நோய்த்­தொற்று ஏற்­ப­டுத்­திய விளை­வு­க­ளால் சில நாடு­களில் உள்ள தொழில் நிறு­வ­னங்­கள் தங்­கள் முத­லீ­டு­களை இந்­தி­யா­வுக்கு இடம்பெயர்த்­திட முடிவு செய்­துள்­ள­தா­க­வும் அந்த முத­லீ­டு­க­ளைத் தமி­ழ­கத்­துக்கு ஈர்க்க தலை­மைச் செய­லா­ளர் தலை­மை­யில் சிறப்­புப் பணிக்­குழு ஒன்றை முத­ல­மைச்­சர் எடப்­பாடி பழ­னி­சாமி அமைத்­துள்­ள­தா­க கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் வோக்ஸ்­வா­கன், ஸ்கோடா, மெர்­சி­டஸ் பென்ஸ், ஆடி, ஹொண்டா, டொயோட்டோ, பி.எம்.டபிள்யூ, லக்ஸ்­ஜென் டயோ­யு­வான், ஜாகு­வார் லாண்ட்­ரோ­வர், ஜெனரல் மோட்­டார்ஸ், செவர்­லெட், டெஸ்லா ஆகிய 11 நிறு­வ­னங்­க­ளின் நிர்­வா­கி­க­ளுக்கு தமிழ்­நாட்­டில் முத­லீடு செய்ய அழைப்பு விடுத்து முத­ல­மைச்­சர் கடி­தம் எழு­தி­யுள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என முதலமைச்சர் பழனிசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகளும் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!