கிருமியைக் கட்டுப்படுத்த களமிறங்கும் 5 அமைச்சர்கள்

சென்னை: சென்­னை­யில் நாளும் அதி­க­ரித்து வரும் கொரோனா கிரு­மித்தொற்றை ஒரு கட்­டுக்குள் கொண்டுவர ஐந்து அமைச்­சர்­கள் கொண்ட குழுவைக் களமிறக்­கி­உள்­ளது தமி­ழக அரசு.

தமி­ழ­கத்தில் கிரு­மித்­தொற்று இருப்­ப­தாக உறுதி செய்­யப்­பட்ட 28,694 பேரில் 19,826 பேர் சென்­னை­யைச் சேர்ந்­த­வர்­கள்.

கிருமி பாதிப்பால் உயி­ரி­ழந்த 232 பேரில் சென்­னை­யில் மட்­டுமே 178 போ் மரணமடைந்துள்ளனா். மொத்த உயி­ரி­ழப்­பில் சென்­னை­யில் மட்­டும் 76% உயிரிழந்துள்ளனர். இத­னால் மக்­கள் மத்­தி­யில் அச்­சம் நில­வு­கிறது.

சென்னை மாவட்­டம் 15 மண்­ட­லங்­க­ளா­கப் பிரிக்­கப்­பட்டு, கிருமித் தடுப்­புப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அதி­லும் குறிப்­பாக ராய­பு­ரம், திரு.வி.க நகர், அண்ணா நகர், கோடம்­பாக்­கம், தேனாம்­பேட்டை, தண்­டை­யார்­பேட்டை ஆகிய மண்­ட­லங்­க­ளில்­தான் பாதிப்பு அதி­க­மாக உள்­ளது.

இந்­நி­லை­யில், சென்­னை­யில் கொரோ­னா­வைக் கட்­டுப்­ப­டுத்த மூன்று மண்­ட­லங்­க­ளுக்கு ஒரு அமைச்­சர் வீதம் நிய­மித்­துள்­ளது தமி­ழக அரசு.

இது­கு­றித்து தமி­ழக தலை­மைச் செய­லா­ளர் சண்­மு­கம் வெளி­யிட்­டுள்ள அர­சா­ணை­யில், “சென்னை மாந­க­ராட்­சி­யைப் பொறுத்­த­வரை கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த ஒவ்­வொரு மண்­ட­லம் வாரி­யா­க­வும் கண்­கா­ணிப்­புக் குழுக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

“இக்­கு­ழுக்­களை ஒருங்­கி­ணைக்­க­வும் நிவா­ர­ணப் பணி­களை வழங்கவும் ஐந்து அமைச்­சர்­கள் கொண்ட குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. ஒவ்­வொரு அமைச்­சரும் மூன்று மண்­ட­லங்­களை ஒருங்­கி­ணைக்­கும் பணி­யில் ஈடு­ப­டுவர்.

“அதன்­படி மீன்­வ­ளத்­துறை அமைச்­சர் ஜெயக்­கு­மார் சென்னை மாந­க­ராட்­சி­யில் உள்ள மாத­வ­ரம், தண்­டை­யார்­பேட்டை, ராய­பு­ரம் மண்­ட­லங்­க­ளை­யும் உயர் கல்­வித்­துறை அமைச்­சர் கே.பி.அன்­ப­ழ­கன் அடை­யாறு, பெருங்­குடி, சோழிங்­க­நல்­லூர் மண்­ட­லங்­க­ளை­யும் உண­வுத்­துறை அமைச்­சர் காம­ராஜ் அண்­ணா­ந­கர், தேனாம்­பேட்டை, கோடம்­பாக்­கம் மண்­ட­லங்­க­ளை­யும் வரு­வாய், பேரி­டர் மேலாண்மைத் துறை அமைச்­சர் ஆர்.பி.உத­ய­குமார் திரு­வொற்­றி­யூர், மணலி, திரு.வி.க. நகர் மண்­ட­லங்­க­ளை­யும் போக்­கு­வ­ரத்து துறை அமைச்­சர் எம்.ஆர்.விஜ­ய­பாஸ்­கர் அம்­பத்­தூர், வள­ச­ர­வாக்­கம், ஆலந்­தூர் ஆகிய மண்­ட­லங்­க­ளை­யும் ஒருங்­கி­ணைக்­கும் பணி­களில் ஈடு­ப­டு­வார்­கள்,” என்று கூறப்­பட்­டுள்­ளது.

தற்­போது அமைக்­கப்­பட்ட இந்த அமைச்­சர்­கள் குழு­வி­ன­ரா­வது மக்­க­ளி­டம் விழிப்­பு­ணர்வை ஏற்­படுத்தி, கொரோனா கிரு­மி­யைக் குறைப்­பதற்கு நட­வ­டிக்கை எடுப்­பார்­களா என்­பதே சென்னை மக்­க­ளின் முக்கிய கேள்­வி­யாக உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!