மரண விகிதம்: மாநகர்களை விஞ்சிய அகமதாபாத் நகரம்

டெல்லி, மும்பையுடன் ஒப்பிடுகையில் மக்கள்தொகை பாதிதான் என்றாலும் பலி அதிகம்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் 1 கோடி பேருக்­கும் அதிக மக்­கள் வாழ்­கின்ற மும்பை, டெல்லி போன்ற நகர்­களில் கொரோனா கிரு­மித்­தொற்று மிக அதி­க­மா­கக் கூடி வரு­கிறது.

ஆனால் மரண விகி­தத்­தைப் பார்க்­கை­யில், அந்த நகர்­க­ளின் மக்­கள்­தொ­கை­யில் ஏறக்­கு­றைய பாதி அள­வுக்கு மக்­க­ளைக் கொண்ட குஜ­ராத்­தின் அக­ம­தாபாத் நக­ரம்­தான் முத­லி­டத்­தில் இருந்து வருகிறது.

மொத்­தம் 50 மில்­லி­ய­னுக்­கும் அதிக மக்­கள் வசிக்­கும் ஐந்து நகர்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் ஒரு மில்­லி­யன் பேருக்கு 115 பேர் என்ற விகி­தத்­தில் அக­ம­தா­பாத்­தில் மரண அளவு இருக்­கிறது.

இந்த அளவு, மும்­பையில் ஒரு மில்­லி­யன் பேருக்கு 80 பேர் மர­ணம் என்ற நிலை­யில் இருக்­கிறது.

பெங்­க­ளூ­ரு­தான் ஒரு மில்­லி­யன் பேருக்கு ஒரு மர­ணம் என்ற அள­வில் மரண அளவு மிக­வும் குறைந்த நக­ராக இருப்­ப­தாக புள்ளி­வி­வ­ரங்­கள் காட்­டு­கின்­றன.

இத­னி­டையே, இந்­தி­யா­வில் கொரோனா தொற்று கட்­டுப்­ப­டுத்த முடி­யாத அள­வுக்­குப் பெரு­கி­வி­ட­வில்லை என்­றா­லும் அப்­ப­டிப்­பட்ட ஒரு நிலை ஏற்­ப­டக்­கூ­டிய வாய்ப்பு இன்­ன­மும் இருப்­ப­தா­க­வும் உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் வல்­லு­நர்­கள் தெரி­வித்து இருக்­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில், இந்­தியா, சீனா போன்ற நாடு­களில் அதிக பரி­சோ­த­னை­கள் நடத்­தி­னால் அங்கு கொரோனா கிரு­மித்­தொற்று அமெ­ரிக்­கா­வை­விட அதி­க­மாக இருக்­கும் என்று அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப் தெரி­வித்­தார்.

இவ்­வே­ளை­யில், இந்­தி­யா­வில் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை நேற்­றுக் காலை 8 மணி நில­வ­ரப்­படி 226,770 லிருந்து 236,657ஆக உயர்ந்­துள்­ளது என மத்­திய சுகா­தா­ர அமைச்சு தெரி­வித்­தது.

உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 6,348லிருந்து 6,642ஆக உயர்ந்­துள்­ளது. குண­ம­டைந்­தோர் எண்­ணிக்கை 114,073ஆக உயர்ந்­துள்ள தாகவும் புள்ளிவிவரங்கள் தெரி வித்துள்ளன.

உலக அள­வில் கொரோனா பாதிப்­பில் இத்­தா­லியை விஞ்சி 6வது இடத்­தில் இந்­தியா இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்­நி­லை­யில், டெல்­லி­யில் உள்ள அம­லாக்­கப்­பி­ரிவு தலைமை அலு­வ­ல­கத்­தின் சிறப்பு இயக்­கு­நர் உட்­பட ஊழி­யர்­கள் ஐவ­ருக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

அத­னை­ய­டுத்து டெல்லி கான் மார்­கெட் பகு­தி­யில் உள்ள லோக் நாயக் பவ­னில் அமைந்­துள்ள அம­லாக்­கப்­பி­ரிவு தலைமை அலு­வ­ல­கம் இரண்டு நாட்­க­ளுக்கு மூடப்­பட்டு உள்­ளது.

அதே­போல, மத்­திய சுகா­தா­ரத் துறை அமைச்­சி­லும் கடந்த ஏழு நாட்­களில் ஐவ­ருக்கு தொற்று ஏற்­பட்­ட­தால் அந்த அமைச்சு இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை வரை மூடப்­படு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட அமைச்சு கட்­ட­டங்­கள் முற்­றி­லும் சுத்­தப்­ப­டுத்­தப்­படு­கின்­றன. இந்­தி­யா­வில் ஜூன், ஜூலை­யில் கிரு­மித்­தொற்று உச்­சத்தைத் தொடும் என்­றும் பிறகு அது குறை­யத் தொடங்­கும் என்றும் வல்­லு­நர்­கள் பலரும் கணித்து இருக்­கி­றார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!