அசாம் இளைஞரின் சிறுநீர்ப் பையில் கைபேசி மின் கம்பி

அசாம் இளைஞரின் சிறுநீர்ப் பையில் கைபேசி மின் கம்பி

1 mins read

கௌஹாத்தி: அசாம் மாநி­லம் கௌஹாத்­தி­யில் இருக்­கும் அரசு மருத்­து­வ­ம­னை­யில் வயிற்றுவலிக்­குச் சிகிச்சை பெறச் சென்ற ஓர் இளைஞர், கைபே­சிக்கு மின்­சாரத்தை ஏற்­றும் மின்கம்­பியை (சார்­ஜர்) தவ­று­த­லாக விழுங்­கி­விட்­ட­தாக தெரி­வித்­ததை அடுத்து மருத்­து­வர்­கள் அவ­ரின் வயிற்­றைப் பரிசோ­தித்­த­னர்.

ஆனால் வயிற்­றில் கம்பி எது­வும் இல்லை. இரைப்­பைக் குடல் பகுதி­களிலும் எதுவும் இல்லை.

இத­னால் குழப்­ப­ம­டைந்த மருத்­து­வர்­கள், அவ­ரது வயிற்­றுப் பகுதி முழு­வ­தும் படம் எடுத்­துப் பார்த்­த­தில் அவ­ரது சிறு­நீர்ப் பையில் மின் கம்பி இருப்­ப­தைக் கண்டு அதிர்ச்சி அடைந்­த­னர்.

சிறு­நீர்ப் பையில் அறுவை சிகிச்சை செய்து அந்த கம்­பியை மருத்­து­வர்­கள் அகற்­றி­னர்.

இது பற்றி கருத்து கூறிய அந்த மருத்­து­வ­மனையின் மருத்­து­வர் வலியுல் இஸ்­லாம், அந்த இளை­ஞர் வாய் வழி­யா­க மின்கம்­பியை விழுங்­கி­யி­ருக்க வாய்ப்­பில்லை என்­றும் என்ன காரணத்திற்காகவோ உண்மையை அவர் மறைப்­ப­தா­க­வும் தெரி­வித்­தார்.