லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்னோ நகரில் மருத்துவ சிகிச்சைக்குக் குடும்பத்தாருடன் சென்ற 25 வயது மாது ஒருவரை மருந்தகத்தில் இருந்த இரண்டு மருத்துவர்கள் பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்திவிட்டதாக போலிசார் தெரிவித்தனர்.
அப்போது குடும்பத்தினர் மருந்தகத்துக்கு வெளியே இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்றதும் தனக்கு நேர்ந்த கதி பற்றி அந்த மாது குடும்பத்தாரிடம் விளக்கிக் கூறினார்.
உடனே அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று இரண்டு மருத்துவர்களையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பிறகு குடும்பத்தினர் போசிலிடம் புகார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அசோக் என்ற மருத்துவர் கைதானார். மற்றொருவர் தலைமறைவாகிவிட்டார். வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இம்சம்பவம் தொடர்பில் இருவர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக போலிஸ் கூறியது.

