இறந்த கொவிட்-19 நோயாளியின் உடல் அவமதிப்பு

இறந்த கொவிட்-19 நோயாளியின் உடல் அவமதிப்பு

1 mins read
3bbfdd30-3166-49c6-b901-275f4d0d20e2
-

இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தில் கொவிட்-19 நோயாளி ஒருவரின் இறந்த உடலை அவசரமாக குழிக்குள் தள்ளும் காணொளி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் பாதுகாப்பு மேலாடைகள் ஏதும் இன்றி இறந்தவரின் உடல், உரிய மரியாதையின்றி குழிக்குள் சிலர் வீசயதை அந்த 30 வினாடி காணொளி காண்பிக்கிறது.

இந்நிலையில் இறந்த நபரை அவமதிக்கும் சுகாதார ஊழியர்களும் அந்த மேற்பார்வையாளர்களும் தண்டிக்கப்படுவர் என்று ஊழலுக்கு எதிரான இந்தியா என்கிற இயக்கத்தின் தலைவர் டாக்டர் எஸ்.ஆனந்த்குமார் தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் சென்னையில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் சிலர் மறுத்த சம்பவத்தை இக்காணொளி நினைவுபடுத்துவதாக இணையத்தில் சிலர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து புதுச்சேரி ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.