இறந்த யானைக்காக தீபமேற்றும் இயக்கம்

இறந்த யானைக்காக தீபமேற்றும் இயக்கம்

1 mins read
5b2c7426-fb96-422c-93c4-61d1a4f38e00
-

வெடி வைத்து கொடுக்கப்பட்ட அன்னாசி பழத்தை உண்டு கொடூரமாக மாண்ட கர்ப்பிணி யானைக்காகவும் இதுவரை இறந்த யானைகளுக்காகவும் பலர் இன்று விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்தது. 15 வயதான கர்ப்பிணி யானை ஊருக்குள் புகுந்துள்ளதபோது அந்த அன்னாசிப்பழம் அதற்குக் கொடுக்கப்பட்டது. பழத்தை துதிக்கையில் ஏந்தி வாயில் போட்டபோது அன்னாசிப்பழம் வெடித்தது. தனது வாய்ப்பகுதி கடுமையாகக் காயமடைந்த நிலையில் அந்த யானை ஆறு ஒன்றுக்குள் இறங்கி நின்று மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர் நீத்தது.

யானையில் மறைவுக்காக பலர் டுவிட்டரில் தங்களது வேதனையை வெளியிட்டனர். இச்சம்பவத்தின் தொடர்பில் என்பவர் பி. வில்சன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் யானையின் ஆத்மா சாந்தி அடையவேண்டும் என வேண்டிக்கொள்வதற்காக இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.