இதுவரை இல்லாத வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 19 பேர் கிருமித் தொற்றுக் கு பலியானார்கள். அவர்கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்தவ ர்கள். இதன் மூலம் உயிரிழப்பு எண் ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
19 பேரில் 8 பேர் எவ்வித இணைநோய்ளும் இல்லாதவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு மொத்த ம் 1,458 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர் . இதையடுத்து பாதித்தவர்களின் எண்ணிக்கை 30,152 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 874 ஆண்களும் 584 பெண்களுக் கு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் .

