மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83 ஆயிரம் ஆனது

மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83 ஆயிரம் ஆனது

1 mins read
8bea694e-09df-4fd6-846b-f2c18492aabc
மும்பையில் வேலை பார்த்து வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்காக மகாரா‌ஷ்டிர மாநிலத்தின் மும்பை பொரிவாலி ரயில் நிலையத்தில் கூடியிருக்கின்றனர். படம்: இஎஃப்இ - திவ்யகாந்த் சோலங்கி -

மும்பை: மகாராஷ்டிராவில் 'கொவிட்-19' நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 2,739 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அன்றைய தினம் மட்டும் 120 பேர் பலியாகினர்.இதையடுத்து கொரோனா பலி எண்ணிக்கை 2,969ஆக அதிகரித்துள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,900ஆக அதிகரித்துள்ள நிலையில், அப்பகுதியில் 71 பேர் பலியாகி உள்ளனர். அங்கு பலருக்கும் கொவிட்-19 நோயைக் கண்டறிய பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.