தனது வீட்டுக்கு வெளியிலுள்ள தெருவோரத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியின் உயிரை திடீரெனப் பின்னோக்கிச் சென்ற ஒரு மெர்சடிஸ் சொகுசுக்கார் பலிவாங்கியது.
புதுடெல்லியில் ராதிகா என்ற 10 மாதச் சிறுமி கார் நிறுத்தும் இடத்தில் விளையாடிக்கொண்டிருந்தது 31 வயது அகிலேஷ் என்பவர் திடீரென தமது காரை பின்னோக்கிச் செலுத்தினார். அச்சிறுமி தமது காருக்கு பின்னால் இருந்ததைத் தாம் கவனிக்கவில்லை என்று கைது செய்யப்பட்டுள்ள அகிலேஷ் கூறினார்.
கடுமையான ரத்தக் காயங்களுடன் காணப்பட்ட ராதிகா, சுயநினைவு இழந்த நிலையில் டெல்லியின் தீன்தயால் உபத்யாயே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். மருந்துவமனையை அடைவதற்கு முன்பாகவே அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பெரியவர்களின் கவனிப்பின்றி சிறுமி கார் நிறுத்தும் இடத்தில் இருந்தது குறித்து விசாரிக்கப்படவுள்ளது.

