பாதுகாப்பு இடைவெளி, வெப்பநிலை சோதனை, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வழிபாட்டு இடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இம்மாதம் 31ஆம் தேதி வரை நீடிக்கும் அதன் ஐந்தாவது பொதுமுடக்கத்தின்போது வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படலாம் என்றும் அதற்கான அதிகாரத்தை மாநில அரசுகள் வழங்கும் என்று அந்நாட்டின் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த வழிபாட்டுத் தலங்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

