கேரளாவில் இம்முறை நாய்க்கு வேதனை

கேரளாவில் இம்முறை நாய்க்கு வேதனை

1 mins read
b71f19b2-bff1-4c82-89a0-ed87e33ab944
-

கேரளாவில் வெடிப்பொருளைக் கொண்ட அன்னாசியால் கர்ப்பிணி யானை ஒன்று காயமடைந்து மடிந்தது. இதற்கு அடுத்து தெருநாய் ஒன்றின் வாய் அண்மையில் அடையாளம் தெரியாதவர்களால் வாரால் கட்டப்பட்டது. அந்நாய் இரண்டு வாரங்கள் வாய் திறக்க முடியாமல் தவித்த பின்னர் விலங்கு நல அமைப்பினர் சிலர் நாயைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்த வாரை அகற்றினர்.

உணவு உண்ணாமலும் தண்ணீர் குடிக்கமாலும் நாய்கள் சில வாரங்களாக வாழ முடிந்தாலும் பெரும் துன்பத்தை உணர்வதாக கேரளாவிலுள்ள விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

விலங்கு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அந்நாயின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.