புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,983 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிைலயில் தொடர்ந்து ஆறாவது நாளாக ஒரே நாளில் 9,000க்கும் மேற்பட்டோர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது, மிகப்பெரிய ஒரு நாள் உயர்வாகும். இதையடுத்து கிருமியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தைப்பிடித்துள்ளது.
இதுவரை இந்தியாவில் 2,56,611 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருமியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,135 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட 1,25,381 ேபர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 1,24,095 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று முன்தினம் மட்டும் 4,802 பேர் குணமடைந்துள்ளனர்.
குணமடையும் விகிதம் 48 விழுக்காடாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,25,381 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று முன்தினம் மேலும் 3,007 பேருக்கு கிருமிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,975 ஆக அதிகரித்து சீனாவில் ஏற்பட்ட பாதிப்பையும் மிஞ்சிவிட்டது.
ராஜஸ்தானில் மேலும் 262 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 10,599 ஆக உயர்ந்து உள்ளது.
டெல்லியில் ஒரே நாளில் 1,282 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 28,936 ஆக அதிகரித்தது.
ெடல்லியில் மட்டும் கிருமித் தொற்றிலிருந்து 10,999 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 812 பேர் உயிரிழந்துள்ளனர்.

