ஒரே நாளில் 331 பேர் உயிரிழப்பு

ஒரே நாளில் 331 பேர் உயிரிழப்பு

1 mins read
f68b3f22-841c-4f1f-974e-ccb7ca932cf3
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 331 பேர் கொரோனா கிருமித் தொற்றால் மரணமடைந்துள்ளனர். படம்: ஏஎப்பி -

இந்தியாவில் இதற்குமுன் இல்லாத அளவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 9,987 பேரை கொவிட்-19 கிருமி தொற்றி விட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 266,598ஆக அதிகரித்து விட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 331 பேர் கொரோனா தொற்றால் மரணமடைய, மொத்த உயிரிழப்பு 7,466ஆக உயர்ந்துவிட்டதாக சுகாதார, குடும்ப நல்வாழ்வு அமைச்சு தெரிவித்தது. ஆக அதிகமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 88,528 பேரையும் தமிழ்நாட்டில் 33,229 பேரையும் கொரோனா கிருமி தொற்றிவிட்டது.