கூட்டமாகக் கூடினால் தளர்வுகள் மீட்கப்படும்: மகாராஷ்டிர முதல்வர்

கூட்டமாகக் கூடினால் தளர்வுகள் மீட்கப்படும்: மகாராஷ்டிர முதல்வர்

1 mins read
9dc2bf3f-edf4-4fad-863b-90e77d260362
மும்பையில் கொவிட்-19 கட்டுப்பாடுகளில் சில தளர்த்தப்பட்ட நிலையில் அந்நகர மக்கள் உடற்பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மெரைன் டிரைவ் பகுதியில் பிராமினேட்டில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் இவர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

இந்­தி­யா­வின் கொரோனா கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 276,000ஐ கடந்­து­விட்ட நிலை­யில் மகா­ராஷ்­டிர மாநி­லமே அதிக கிரு­மித்­தொற்­றால் அவ­திப்­ப­டு­கிறது.

ஊர­டங்கு நடப்­பில் இருப்­பி­னும் அத்­தி­யா­வ­சி­யத் தேவை­க­ளுக்­காக அங்கு சில தளர்­வு­கள் செய்­யப்­பட்டு உள்­ளன.

இந்­நி­லை­யில் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய மகா­ராஷ்­டிர முதல்­வர் உத்­தவ் தாக்­கரே, பொது­மக்­கள் கூட்­ட­மா­கக் கூடு­வ­தைத் தவிர்க்க வேண்­டும் என்­றும் தமது வேண்­டு­கோ­ளுக்­குக் கட்­டுப்­ப­டா­விட்­டால் தளர்­வு­கள் மீட்­கப்­படும் என்­றும் எச்­ச­ரிக்­கை­யா­கத் தெரி­வித்­தார்.

"கிரு­மித்­தொற்று இன்­னும் நம்மை மிரட்­டிக் கொண்டு இருக்­கிறது. பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ஊர­டங்கை ஓர­ள­வுக்­குத் தளர்த்தி இருக்­கி­றோம். அர­சாங்­கத்­தின் விதி­மு­றை­களை மக்­கள் பின்­பற்­று­வார்­கள் என நம்­பு­கி­றேன்.

"உடற்­ப­யிற்சி செய்ய அனு­மதி அளித்­தது உங்­க­ளுக்கு நல்­லது செய்­யத்­தானே தவிர உங்­களை நீங்­களே கெடுத்­துக்­கொள்ள அல்ல," என்­றார்.

ஊர­டங்கு சிறிய அள­வில் தளர்த்­தப்­பட்­ட­தும் மாநிலம் முழு வதும் ஆங்காங்கே பெரு­ம­ள­வில் மக்­கள் கூடி­ய­தைக் குறிப்­பிட்டு அவர் அவ்­வாறு தெரி­வித்­தார்.