2ஆம் கிருமி அலை பட்டியலில் இந்தியா

2ஆம் கிருமி அலை பட்டியலில் இந்தியா

1 mins read
12aee8f0-4955-42a5-831c-2b39179cb892
இந்தியாவில் ஊர­டங்கு கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு பொது­வெ­ளி­யில் மக்­கள் நட­மாட்­டம் அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­லும் பரி­சோ­த­னை­களை அதி­க­ரிப்­ப­தா­லும் தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து உயர்­கிறது. சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவின் கண்ணாடியை கிருமி நாசினி கொண்டு துடைக்கிறார். படம்: ஏஎப்பி -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிருமி வேக­மாக பரவி வரு­கிறது. ஊர­டங்கு கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு பொது­வெ­ளி­யில் மக்­கள் நட­மாட்­டம் அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­லும் பரி­சோ­த­னை­களை அதி­க­ரிப்­ப­தா­லும் தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து உயர்­கிறது.

அதே­ச­ம­யம் குண­ம­டைந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை உயர்ந்து வரு­வது ஆறு­தல் அளிப்­ப­தாக உள்­ளது.

மத்­திய சுகா­தா­ரத் துறை நேற்­றுக் காலை வெளி­யிட்ட தக­வ­லின்­படி இந்­தி­யா­வில் மொத்­தம் 276,583 பேர் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். கடந்த 24 மணி நேரத்­தில் 9,985 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. 279 பேர் மர­ணம் அடைந்­த­னர். இதன்­மூ­லம் கொரோனா கிரு­மி­யால் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை 7,745 ஆக உயர்ந்­து­விட்­டது. உயி­ரி­ழப்பு விகி­தம் 2.8 விழுக்­கா­டாக உள்­ளது.

இம்மாதம் 1 ஆம் தேதி ஊர டங்கு தளர்வுகள் அறிவிக்கபட்ட தில் இருந்து இந்தியாவில் தினமும் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. கடந்த 9 நாட்களில் அந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது.

ஊரடங்கை தளர்த்துவது புதிய தொற்று அதிகரித்து இரண்டாம் அலை உருவெடுக்க வழிவகுக் கும் 15 அபாயகரமான நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது.

ஊரடங்கு தளர்வு கொரோனா பரவும் சூழ்நிலையை உருவாக்கு வதாகவும் பரவல் தீவிரமடைந்து மீண்டும் கடுமையான தடைகளை திணிக்க இது வழிவகுக்கும் என் றும் 'நோமுரா' என்னும் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.