திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி

கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பக்தர்களுக்கான சாமி தரிசனம் 83 நாட்களுக்குப்பின் இன்று (ஜூன் 11) தொடங்கியது. 

இம்மாதம் எட்டாம் தேதி முதல் ஏழுமலையான் கோவிலில் பரிசோதனை அடிப்படையில் தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு ஏழுமலையான் தரிசன வாய்ப்பு வழங்க ஆந்திர மாநில அறநிலையத்துறை அனுமதி அளித்திருந்தது.

கடந்த மூன்று நாட்களில் சுமார் 21,500 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். 

இந்நிலையில் நாளுக்கு 3,000 பேர் என்ற அடிப்படையில் ரூ.300க்கான நுழைவுச் சீட்டுகள் இணையம் வழியாக விற்பனை செய்யப்படுவதுடன், நாளுக்கு 3,000 பேருக்கு சர்வ தரிசன சீட்டுகளும் வழங்கப்படுகின்றன. 

இந்த நிலையில் இன்று காலை சுப்ரபாதம்,தோமாலை, அர்ச்சனை ஆகிய சேவைகளுக்கு பின் மிகக் குறைந்த எண்ணிக்கையான பக்தர்கள் ‘விஐபி’ தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டனர்.

முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து அரசு மற்றும் தேவஸ்தானம் ஆகிய விதித்துள்ள கொரோனா பரவலுக்கு எதிரான நடைமுறைகளை பின்பற்றி ஏழுமலையானை வழிபட்டு வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon