அலட்சியமாக குப்பை வண்டியில் ஏற்றப்பட்ட இறந்தவரின் உடல்

அலட்சியமாக குப்பை வண்டியில் ஏற்றப்பட்ட இறந்தவரின் உடல்

1 mins read
8f108188-dd9a-45a8-84ea-07728fd1490e
-

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 40 சாலையோரம் விழுந்து இறந்த ஆடவரின் உடலை குப்பை வண்டியில் எடுத்துச் சென்றதைக் குறிப்பிடும் செய்தி, சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த ஆடவருக்கு எந்த மரியாதையுமின்றி அவரது சடலத்தை அள்ளி கனரக வாகனத்தின் தொட்டியில் அதிகாரிகள் வீசியபோது அருகில் இருந்த மூன்று போலீசார் கண்டும் காணாமலும் இருந்ததை அருகில் இருந்தவர் எடுத்த காணொளி ஒன்று காட்டுகிறது . சம்பவ இடத்திற்கு வந்திருந்த மருத்துவ உதவி வாகன அதிகாரிகளும் ஆடவரின் சடலத்தை அணுக மறுத்தனர்.

இறந்தவரின் பெயர் முகமது அன்வர் என்றும் சம்பவம் நடந்த நாளில் அவர் உள்ளூர் அரசு அலுவலகத்திற்கு சென்றிருந்ததாகவும் இந்திய செய்தி ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இதன் தொடர்பில் போலிஸ் அதிகாரிகள் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்கிறது.