பீகார் மாநிலத்திலுள்ள இந்திய - நேபாள எல்லைப்பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் நேப்பாள எல்லைப்பகுதி அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அத்துடன் இந்தச் சம்பவத்தில் இருவர் காயம் அடைந்தனர்.
உயிரிழந்த அந்த 25 வயது ஆடவரின் பெயர் திக்கேஷ் குமார் என்றும் காயமடைந்த ஆடவர்களின் பெயர் உமேஷ் ராம் மற்றும் உதே தாகூர் என்றும் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைச் சர்ச்சை நிலவும் நேரத்தில் சீதாமார்ஹி என்ற ஊரில் இந்தச் சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூடு உள்ளூர் மக்களுக்கும் நேபாளத்தின் ஆயுத போலீஸ் படைக்கும் இடையே வாக்குவாதம் நேர்ந்ததை அடுத்து துப்பாக்கிச் சூடு நடந்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

