இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ளது லோனார் ஏரி. 50,000 ஆண்டுகளுக்குமுன் ஒரு விண்கல் மேலிருந்து விழுந்ததால் பூமியில் உருவான பள்ளமே இந்த ஏரி என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்திய தேசிய மரபுடைமைச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஏரி, சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்த ஒரு தலமாகத் திகழ்கிறது. இந்நிலையில், ஏரியின் நீர் திடீரென இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சி தருவது உள்ளூர்வாசிகளை மட்டுமின்றி, இயற்கை ஆர்வலர்களையும் விஞ்ஞானிகளையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இதற்கான காரணம் ஆராயப் பட்டு வருகிறது. ஏரியின் மேற்பரப்பிலிருந்து ஒரு மீட்டருக்குக் கீழே ஆக்சிஜன் இராது எனக் குறிப்பிட்ட லோனார் ஏரிப் பாதுகாப்பு, மேம்பாட்டுக் குழு உறுப்பினர் கஜனன் காரத், பாசியும் உப்புத்தன்மையும் கூடியதால் நிறமாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்கிறார். படம்: இந்திய ஊடகம்
இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறி வியப்பளித்த ஏரி
1 mins read
படம்: இந்திய ஊடகம் -

