இந்தியா ஒரே நாளில் ஆக அதிகமான கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்களின் அதிகரிப்பைக் கண்டுள்ளது. இன்று அந்த எண்ணிக்கை மேலும் 11,458 அதிகரித்து ஒட்டுமொத்தமாக 300,000ஐக் கடந்திருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று, இந்தியாவில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பிரிட்டனையும் மிஞ்சியதால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் 4வது இடத்துக்கு வந்துள்ளது. தேசிய அளவிலான முடக்கநிலையை இந்தியா மார்ச் மாதத்தில் அறிவித்தபோதும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
மகாராஷ்டிரா, இந்தியாவில் ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக உள்ளது. அங்கு 100,000 பேருக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அந்நாட்டின் தலைநகர் புதுடெல்லியிலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,000 கூடியுள்ளது.
இந்தியாவில் தற்போது 145, 779 பேருக்கு கொரோனா உள்ளது.

