கொரோனாவுக்கே குழப்பம்: உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

கொரோனாவுக்கே குழப்பம்: உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

1 mins read
920411fa-5144-4d42-ac37-354b34d87519
-

சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒரு டுவிட்டர் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

"கட்சிக்குள் அதிகாரப் போட்டி, ஆட்சியில் கமிஷன் போட்டி, மத்திய அரசிடம் மண்டியிடும் அடிமை போட்டி. இதனால் கொரோனா தடுப்புப் பணிகள் வெறும் ஊடக பேட்டிகள், அறிக்கைகளில் மட்டுமே நடக்கின்றன. கொரோனா காலத்திலாவது செயல்படுங்கள் முதல்வர் அவர்களே," என்றும் உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு பீலா நியமனம். அதே ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னைக்கு ஒரு குழு. 6 அமைச்சர்கள் கொண்ட மேற்பார்வை குழு. இவர்களை ஒருங்கிணைக்க பங்கஜ்குமார் நியமனம். தற்போது பீலா மாற்றப்பட்டு மீண்டும் ராதாகிருஷ்ணன். பாவம் கொரோனாவே குழப்பமடையப்போகுது," என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். வணிக வரித்துறைச் செயலாளராக அவரை மாற்றம் செய்து உத்தரவிட்ட அரசு, தமிழக சுகாதாரத்துறை செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணனை மீண்டும் நியமித்துள்ளது. 2012ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை சுகாதாரத்துறை செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் உடையவர் ராதாகிருஷ்ணன்.