தொழிற்சாலையில் 165 பேருக்குத் தொற்று: 10,751 ஊழியருக்கு ஐந்து நாட்கள் விடுப்பு

தொழிற்சாலையில் 165 பேருக்குத் தொற்று: 10,751 ஊழியருக்கு ஐந்து நாட்கள் விடுப்பு

1 mins read
cc24731a-09cb-41fd-b78d-3e17018b3750
பெங்களூரில் உள்ள பீனிக்ஸ் மால் கடைத்தொகுதி. படம்: இபிஏ -

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் உள்ள பல்­லாரி மாவட்­டம் சண்­டூ­ரில் செயல்­படும் ஜிந்­தால் என்ற தொழிற்­சா­லை­யில் மொத்­தம் 165 பேருக்கு கிருமிப் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

இத­னால் அங்கு பணி­யாற்­றும் 10,751 தொழி­லா­ளர்­க­ளுக்­கும் 5 நாள் விடு­முறை கொடுக்­கப்­பட்­டது.

ஊழி­யர்­க­ளுக்­குத் தொற்று ஏற்­பட்­டதை அடுத்து அவர்­கள் அனை வரும் அரசு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள்.

அந்த தொழி­லா­ளர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு நிலைமை கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கிறது.

அந்த ஆலையை மூட­வேண்­டும் என்று அந்த வட்­டார மக்­கள் விடுத்­துள்ள கோரிக்­கையை ஆட்­சி­யர் மறுத்­துள்­ளார்.

வேலைக்குச் சென்ற ஒரு சிலரையும் பொதுமக்கள் தடுத்து திருப்பி அனுப்பிவிட்டனர்.