பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள பல்லாரி மாவட்டம் சண்டூரில் செயல்படும் ஜிந்தால் என்ற தொழிற்சாலையில் மொத்தம் 165 பேருக்கு கிருமிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு பணியாற்றும் 10,751 தொழிலாளர்களுக்கும் 5 நாள் விடுமுறை கொடுக்கப்பட்டது.
ஊழியர்களுக்குத் தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர்கள் அனை வரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அந்த தொழிலாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அந்த ஆலையை மூடவேண்டும் என்று அந்த வட்டார மக்கள் விடுத்துள்ள கோரிக்கையை ஆட்சியர் மறுத்துள்ளார்.
வேலைக்குச் சென்ற ஒரு சிலரையும் பொதுமக்கள் தடுத்து திருப்பி அனுப்பிவிட்டனர்.

