கர்நாடகா: மரணம் கூடுவதால் மக்கள் பீதி

1 mins read
bfbca462-49cc-4e58-a445-1107dddff123
கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் உள்ள வெகா சிட்டி மால் என்னும் கடைத்தொகுதியில் வாடிக்கையாளர்களின் உடல் வெப்ப நிலையைச் சரிபார்க்கும் ஊழியர். படம்: ஏஎப்பி - மஞ்சுநாத் -

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்று குறை­வாக இருந்­தா­லும் பலி­ எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­வ­தால் பொது­மக்­கள் பீதி அடைந்­துள்­ள­னர்.

அங்கு வெள்­ளிக்­கி­ழமை ஒரே நாளில் 7 பேர் மர­ணம் அடைந்­த­தால் மொத்த எண்­ணிக்கை 81 ஆகி­யது. கொரோனா பாதித்­தோ­ரின் மொத்த எண்­ணிக்கை 6,442 ஆக உயர்ந்­துள்­ளது. 3,440 பேர் குணம் அடைந்து உள்­ள­னர். 2,995 பேர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள்.