சென்னையில் கிருமித்தொற்று கண்ட 97 வயது முதியவர் குணமடைந்து வீடு திரும்பினார்

சென்னையில் கிருமித்தொற்று கண்ட 97 வயது முதியவர் குணமடைந்து வீடு திரும்பினார்

1 mins read
14946724-171f-4068-b342-02862f38d7c9
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவப் பணியாளர்கள் கைகளைத் தட்டி அவரை உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்தனர். படம்: தகவல் ஊடகம் -

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த 97 வயது முதியவர் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த மே மாதம் 30ஆம் தேதி 97 வயது முதியவர் ஒருவர், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட தீவிர உடல்நலப் பிரச்சினைகளுடன் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர் உயர் ரத்த அழுத்தம், இருதயப் பிரச்சினை உள்ளிட்டவற்றால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து அவர் தொற்றிலிருந்து விடுபட்டு குணமடைந்தார்.

கிருமித்தொற்றிலிருந்து விடுபட்ட அவர், நேற்று முன்தினம் (ஜூன் 12) மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவப் பணியாளர்கள் கைகளைத் தட்டி அவரை உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்தனர்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்