ஊரடங்கு விதிமீறல்: தமிழகத்தில் ரூ. 12.40 கோடி வசூல்

ஊரடங்கு விதிமீறல்: தமிழகத்தில் ரூ. 12.40 கோடி வசூல்

1 mins read
12382a08-2b70-47a4-a5b1-1f074e41edf9
தேவையில்லாமல் வாகனத்தில் வெளியே செல்பவர்களை போலிசார் தடுத்து நிறுத்தி, அபராதம் விதிப்பதுடன், வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர்; கைது நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர். படம்: ஏஎஃப்பி -

கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகளில் பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் நடப்பில் இருந்த ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும் ஊரடங்கு நடப்பில்தான் உள்ளது.

இதனால் தேவையில்லாமல் வாகனத்தில் வெளியே செல்பவர்களை போலிசார் தடுத்து நிறுத்தி, அபராதம் விதிப்பதுடன், வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர்; கைது நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர்.

அந்த வகையில், தற்போது வரை ரூ. 12.40 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும், ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,33,005 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாவும், 4,69,228 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்