நிபுணர்கள் எச்சரிக்கை: நவம்பரில் கிருமித்தொற்று உச்சமடையும்

1 mins read
ae4823f4-ca4e-4d98-a3c0-b4bb2847f856
சென்னையில் அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி அடித்துச் சுத்தப்படுத்தும் தமிழ் நாடு நலவாழ்வுத்துறை ஊழியர்கள். படம்: ஏஎப்பி - அருண் சங்கர் -

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 45 ஆயி­ரத்தை நெருங்கி உள்­ளது.

இந்­நி­லை­யில் நவம்­பர் மாத மத்­தி­யில் தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்பு உச்­ச­ம­டை­யும் என இந்­திய மருத்­துவ ஆராய்ச்சி மன்றம் எச்­ச­ரித்­துள்­ளது.

கடந்த சில தினங்­க­ளாக தமி­ழ­கத்­தில் கொவிட்-19 நோயா­ளி­கள் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. மாநி­லம் முழு­வ­தும் நோய்த்­தொற்­றுப் பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­களை அரசு முடுக்­கி­விட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 38 பேர் கொவிட்-19 நோய்க்கு பலி­யாகி உள்­ள­னர். இது மக்­கள் மத்­தி­யில் அச்­சத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இந்­நி­லை­யில் சென்­னை­யில் மட்­டும் 32 ஆயி­ரம் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது. அடுத்த சில வாரங்­களில் கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வல் உச்­சக்­கட்­டத்தை அடை­யும் என இந்­திய மருத்­துவ ஆராய்ச்சி மன்றம் தெரி­வித்­துள்­ளது.

குறிப்­பாக, தமி­ழ­கத்­தில் நவம்­பர் மாதம் தொற்­றுப் பர­வல் உச்­சம் பெறும் என மருத்­துவ நிபு­ணர்­கள் கூறி­யுள்­ள­னர்.

எனவே அரசுத் தரப்பில் மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.