தமிழகத்தில் 45,000; சென்னையில் 32,000 பேரை நெருங்கும் தொற்று

சென்னை: தமிழகத்தில் கொரோனா உயிர்க்கொல்லி கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45,000ஐ நெருங்கி வருகிறது. இதேபோல் சென்னையிலும் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,000ஐ நெருங்க உள்ளது.

இதுபோல் தினமும் அதிகரித்து வரும் கொரோனா கிருமித் தொற்றின் காரணமாக சென்னை நகரை விட்டு, வேறு எங்காவது பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துவிடவும் ஒருசில மக்கள் யோசித்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தமிழக சுகா தாரத்துறை வெளியிட்டுள்ள அறிக் கையில், “தமிழகத்தில் ஞாயிறன்று ஒரேநாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதில் 33 பேர் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.

“ஒட்டுமொத்த தமிழகத்திலும் மொத்த பாதிப்பு 44,661 ஆகவும் பலி எண்ணிக்கை 435 ஆகவும் அதிகரித்துள்ளது.

“புதிதாக 1,138 பேர் குணமடைந் துள்ள நிலையில், இத்தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,547 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 19,676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“சென்னையில் ஞாயிறன்று மட்டும் 1,415 பேருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,896ஆக உயர்ந்துள்ளது.

“சென்னையில் இதுவரை 16,881 பேர் குணமடைந்து உள்ளனர். 14,667 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இக்கிருமி பாதிப்பால் 347 பேர் உயிரிழந்துள்ளனர்.

“தமிழகத்தில் மொத்த பாதிப்பு களில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 2,270 பேரும் 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 37,252 பேரும் 60 வயதைக் கடந்தவர்கள் 5,139 பேரும் உள்ளனர்,” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!