பரிசோதனை முடிவு ஒருபுறம்; போலிஸ் விசாரணை மறுபுறம்

மும்பை: பிர­பல பாலி­வுட் நடி­கர் சுஷாந்த் தற்­கொலை செய்து கொள்ள வில்லை, கொலை செய்­யப்­பட்­டுள்­ளார் என்று அவ­ரது மாமா பர­ப­ரப்பு குற்­றச்சாட்டை கூறி­யி­ருந்த வேளை­யில் பிரேத பரி­சோ­தனை முதற்கட்ட முடிவு நேற்று வெளி­யா­னது. கொலைக்­கான தட­யம் இல்லை என்­றும் தற்­கொ­லை­தான் செய்­து­கொண்­டார் என்­றம் அதில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

தோனி­யின் வாழ்க்கை வர­லாற்­றுப் படத்தில் நடித்து பல­ரின் மன­தில் இடம் பிடித்­த­வர் சுஷாந்த் சிங் ராஜ்­புத், 34, (படம்). யாரும் எதிர்­பார்க்­காத நிலை­யில் அவ­ரது வீட்­டில் நேற்று முன்­தி­னம் அவர் சட­ல­மாக கண்­டெ­டுக்­கப்­பட்­டார்.

சுஷாந்த் சிங் தற்­கொலை செய்­து­கொண்­டார் என்று தக­வல்­கள் பர­வின. அவ­ரது தாய்­வழி மாமா, “சுஷாந்த் தற்­கொலை செய்ய வாய்ப்பே இல்லை. அவ­ரது மர­ணத்­தில் சந்­தே­கம் உள்­ளது. அதில் சதி இருக்­க­லாம்,” என்று கூறி­னார். அதனால் ஏற் பட்ட பரபரப்பு பிரேத பரிசோதனை முடிவு வெளியானதும் அடங்கி விட்டது.

இருப்பினும் போலிஸ் விசா ரணை தொடருகிறது. சுஷாந்தின் இறுதி கைபேசி அழைப்புகளை அவர்கள் ஆராய்ந்தனர்.

காதலி என்று சொல்லப்படும் நடிகை சுஷாந்தின் அழைப்புகளை ஏற்கா ததும் போலிசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அந்த நடிகையையும் சுஷாந்தின் நண்பர் கள் சிலரையும் விசாரிக்க போலிஸ் முடிவு செய்து உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!