போராட்டத்தை நிறுத்த எம்எல்ஏக்கள் முன் மண்டியிட்ட அதிகாரிகள் இடமாற்றம்

போராட்டத்தை நிறுத்த எம்எல்ஏக்கள் முன் மண்டியிட்ட அதிகாரிகள் இடமாற்றம்

1 mins read
ed062021-1788-4390-b165-bbf231194ffd
கோப்புப்படம்: ஏஎப்பி -

போபால்: மத்­திய பிர­தே­சத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 10,000ஐ கடந்­துள்­ளது. கிரு­மிப் பர­வலை தடுக்க மாநில அரசு எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை என எதிர்க்­கட்­சி­யான காங்­கி­ரஸ் தொடர்ந்து குற்­றஞ்­சாட்டி வரு­கிறது.

இந்­தப் பிரச்­சி­னையை முன்­வைத்து காங்­கி­ரஸ் எம்­எல்­ஏக்­கள் ஜித்து பத்­வாரி, விஷால் பட்­டேல், சஞ்­ஜய் சுக்லா ஆகி­யோர் இந்­தூரில் கடந்த சனிக்­கி­ழமை போராட்­டம் நடத்­தி­னர்.

சம்­பவ இடத்­திற்கு இந்­தூர் காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ளர் திவா­ரி­யும் மாவட்ட துணை ஆட்­சி­யர் ராகேஷ் ஷர்­மா­வும் விரைந்­த­னர். அங்கு சாலை­யில் அமர்ந்து போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருந்த காங்­கி­ரஸ் எம்­எல்­ஏக்­க­ளைக் கலைந்து செல்­லு­மாறு வலி­யு­றுத்­தி­னர்.

மேலும் எம்­எல்­ஏக்­க­ளுக்கு அரு­கில் சென்ற இரு அதி­கா­ரி­களும் மண்­டி­யிட்டு கைக்­கூப்பி போராட்­டத்தை விலக்­கிக்­கொள்­ளு­மாறு வேண்­டு­கோள் விடுத்­த­னர்.

இச்­சம்­ப­வத்­தைக் காட்­டும் காணொ­ளி­கள் சமூக வலை­த­ளங்­களில் வேக­மாக பர­வின. இந்­நி­லை­யில் எம்­எல்­ஏக்­கள் முன் மண்­டி­யிட்ட இரண்டு அதி­கா­ரி­க­ளை­யும் தலை­ந­கர் போபா­லுக்கு பணி­யிட மாற்­றம் செய்து மாநில அரசு உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.