லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் காருக்குள் அமர்ந்து நான்கு சிறுவர்கள் உற்சாகமாக விளை யாடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்தக் காரின் கதவு தானாகவே சாத்திக்கொண்டதில் இரு சிறு வர்கள் மூச்சுத் திணறி உயி ரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மொரதாபாத்தில் உள்ள முந்தா பாண்டே பகுதியில் இச்சம்பவம் நடந்ததாகவும் 4 முதல் 7 வய திற்குட்பட்ட சிறுவர்கள் அனை வரும் ஒருவருக்கு ஒருவர் சொந்தம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மொரதாபாத் நகர போலிஸ் உயர் அதிகாரி அமித் குமார் ஆனந்த் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், "காரின் அருகில் யாரும் இல்லாத நிலையில் காருக் குள் சிக்கியவர்கள் மூச்சுத்திணறி மயங்கியுள்ளனர்.
"காருக்குள் மயக்க நிலையில் இருந்த சிறுவர்களை மீட்டு மருத் துவமனைக்கு கொண்டு சென்ற போது, சிறுவர்களில் இருவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வருகின்றனர்," என்று தெரிவித்துள்ளார்.
தான் அங்கு வந்து பார்த்தபோது, குழந்தைகள் பேச்சுமூச்சு இல்லாமல் இருந்ததாகவும் நேற்று காலை 8 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக வும் காரின் சொந்தக்காரர் கூறி னார். சம்பவம் குறித்து போலிசாரின் விசாரணை தொடர்கிறது.

