கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்த அமைச்சர்

கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்த அமைச்சர்

1 mins read
575a0c8e-e2e3-45b2-9d08-08a182002215
-

மிசோ­ரம்: மிசோ­ரம் மாநி­லத்­தில் விளை­யாட்­டுத் துறை அமைச்­ச­ராக இருப்­ப­வர் ராபர்ட் (படம்). அங்­குள்ள ஐஸ்­வால் நக­ரில் உள்ள சிட்­வெங் பகு­தி­யில் வசித்து வரு­கி­றார்.

இவ­ரது பக்­கத்து வீட்­டுக் கார­ரான லாங் சில்­லோவா என்­ப­வர் தனது இடிந்­து­போன வீட்­டைப் புதுப்­பித்­துக் கட்டி வரு­கி­றார். மாடிக்கு பெரிய பெரிய பாறாங்­கற்­க­ளைக் கொண்டு சென்­றால் கட்­ட­டப் பணி­கள் ஓர­ளவு முடி­ந்துவிடும்.

ஊர­டங்கு உத்­த­ர­வால் போதுமான அள­வில் கட்­டு­மான ஊழி­யர்­கள் கிடைக்­கா­மல் அவ­திப்­பட்டு வந்­தார்.

இந்­நி­லை­யில் இந்த தக­வல் கேள்­விப்­பட்ட அமைச்­சர் ராபர்ட், 50 மீட்­டர் தொலை­வில் கொட்­டப்­பட்­டி­ருந்த கற்­களை தன் தோளில் சுமந்து சென்று, கட்­டு­மானப் பணிகள் நடக்­கும் மாடிக்­குக் கொண்­டு­போய் சேர்த்­துள்­ளார்.

ஒருநாள் முழு­வ­தும் கட்ட­டத் தொழி­லா­ளி­யாக வேலை பார்த்­துள்­ளார் அமைச்­சர் ராபர்ட்.

மிகச்­சி­றந்த காற்­பந்து வீரரான ராபர்ட், கற்­களை அனா­யா­ச­மா­கத் தோளில் சுமந்து சென்­றதை அங்­குள்ள யாரும் ஆச்­ச­ரி­ய­மா­கப் பார்க்­க­வில்லை.

பெரும் சிரத்தை எடுத்து அமைச்­சர் ராபர்ட் கல் சுமந்­து வந்தது பக்­கத்து வீட்­டுக்­கா­ரரை நெகிழவைத்­துள்­ளது.