'கொரோனா மீட்பு விகிதம் 52% கடந்தது'

'கொரோனா மீட்பு விகிதம் 52% கடந்தது'

1 mins read
5de0362a-d87c-47c5-a892-3a6e3a834e5a
கொரோனா கிருமித்தொற்றில் இருந்து இதுவரை 52 விழுக்காட்டினருக்கு மேல் குணமடைந்துள்ளனர் என்று இந்திய நலத்துறை விவரம் வெளியிட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா பாதிப்­பில் இருந்து குண­ம­டைந்­த­வர்­க­ளின் விகி­தம் 52%க்கு மேல் அதிகரித்துள்ளதாக மத்­திய சுகா­தா­ரத்­துறை அமைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.

இது­கு­றித்து அமைச்­சு வெளி­யிட்­டுள்ள அறிக்கையில், "இந்­தி­யா­வில் கொரோனா கிருமித்தொற்­றால் பாதிக்­கப்­பட்டு செவ்­வாய்க்­ கி­ழமை வரை ஒரு லட்­சத்து 80 ஆயி­ரத்­திற்­கும் அதி­க­மா­னோர் குண­ம­டைந்து வீட்­டிற்குச் சென்­றுள்­ள­னர்.

"கடந்த மூன்று நாட்­க­ளாக 52.46%க்கும் அதி­க­மான மீட்சி விகிதத்தை இந்­தியா பெற்­றுள்­ள­தா­க­வும் திங்­க­ளன்று மீட்பு விகி­தம் 51%க்கும் அதி­க­மாக இருந்­த­தாகவும் ஒரு லட்­சத்து 69 ஆயி­ரத்து 797 நோயா­ளி­கள் கொடிய தொற்­றில் இருந்து மீட்­கப்­பட்­டுள்­ள­னர்," என்றும் சுகா­தா­ரத்­துறை விவரம் வெளியிட்டுள்ளது.புதிய