இந்திய பிரதமர் மோடியின் முகம் அச்சிடப்பட்ட முகக்கவசங்களை விற்பனை செய்கிறார் துணி வியாபாரி ஒருவர்.
மத்திய பிரதேசத்தின் போபாலில் துணிக்கடை வைத்திருக்கும் குனால் பரியானி எனும் ஆடவர், பிரதமர் மோடி மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் ஆகியோரின் உருவம் பொறித்த முகக் கவசங்களையும் விற்கிறார்.
இதுபோன்ற முகக்கவசங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதாகக் கூறியுள்ளார் அவர்.
இதுவரை இத்தகைய சுமார் 1,000 முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் திரு குனால்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

