கொவிட்-19: இந்தியாவில் ஒரே நாளில் 2,003 பேர் பலி: பாதிப்பு எண்ணிக்கை 350,000ஐ தாண்டியது

2 mins read
643fea7d-7cc0-486e-8d2f-afe82457c4e1
நாடு முழுவதும் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் வெப்பநிலையை பரிசோதிப்பது அதிகரித்துள்ளது. படம்: ஊடகம் -

ஒரே நாளில் இரண்டாயிரம் பேர் கொரோனா கிருமித்தொற்றால் பலியானதை அடுத்து, இந்தியாவில் ஒட்டுமொத்த மரண எண்ணிக்கை 12,000ஐ நெருங்கியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொவிட்-19 நோயால் ஏற்பட்ட முதல் மரணம் பதிவு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட நூறு நாட்களுக்குப் பிறகு இந்நோய்க்கு 11,903 பேர் பலியாகி இருப்பதாக இன்று (ஜூன் 17) காலை சுகாதார அமைச்சு தெரிவித்தது.

நாடு முழுவதும் தற்போது சுமார்350,000 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே சமயம் சுமார் 1.8 லட்சம் பேர் கொவிட்-19 நோயில் இருந்து குணமடைந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 10,215 பேர் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,500ஆகவும் மேற்கு வங்கத்தில் இந்த எண்ணிக்கை சுமார் 12,000 ஆகவும் அதிகரித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் சுமார் 13,000, ராஜஸ்தானில் 13,000, மத்தியப் பிரதேசத்தில் 11,000 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலி எண்ணிக்கை 12,000ஐ நெருங்கியிருப்பதால் மக்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது. எனினும் நோய் கண்டவர்களில் பாதிக்கும் அதிகமானோர் குணமடைந்திருப்பதை மத்திய, மாநில அரசுகள் சுட்டிக் காட்டியுள்ளன.

குஜராத்தில் இதுவரை 1,505 பேரும், மேற்கு வங்காளத்தில் 485 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 465 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 399 பேரும், ராஜஸ்தானில் 301 பேரும், தெலுங்கானாவில் 187 பேரும்ப லியாகி உள்ளனர்.

இதற்கிடையே கொரோனா கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்