கொவிட்-19: மும்பை, டெல்லி நிலவரம்

கொவிட்-19: மும்பை, டெல்லி நிலவரம்

1 mins read
fdc9a39d-bfee-485b-85e0-5f2f2ec680c9
மகாரா‌ஷ்டிரா நலத்துறை ஊழியர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொண்டூழியர்களும் மும்பையின் ராமாபாய் அம்பேத்கார் நகரில் உள்ள மக்களிடம் உடல் வெப்பநிலை உள்ளிட்ட மருத்துவச் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். படம்: இபிஏ -

மும்பை: கொரோனா கிரு­மித்­தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்ள மாநி­லங்­களின் பட்­டி­ய­லில் மகா­ராஷ்­டிரா தொடர்ந்து முன்­னிலை வகித்து வருகிறது.

அங்கு ஒரே நாளில் புதி­தாக 2,701 பேருக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. மேலும் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை 5,537ஆக அதி­க­ரித்­துள்­ளது.

மகா­ராஷ்­டி­ரா­வில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 1,13,445 ஆக அதி­க­ரித்­துள்ள நிலை­யில், இது­வரை 57,851 பேர் குணமடைந்­துள்­ள­தாக அம்­மா­நில சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது

செவ்­வாய்க்­கி­ழமை ஒரே நாளில் டெல்­லி­யில் புதி­தாக 1,859 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து அங்கு பாதிக்­கப்­பட்­டோ­ரின் ஒட்­டு­மொத்த எண்­ணிக்கை 45 ஆயி­ரத்தை நெருங்கி உள்­ள­தாக அம்­மா­நில சுகா­தா­ரத்­துறை நேற்று தெரி­வித்­துள்­ளது.