ஐநா பாதுகாப்பு மன்றத்தில் உறுப்பினரான இந்தியா

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தின் தற்காலிக உறுப்பினராக இந்தியா, மெக்சிகோ, அயர்லாந்து, நார்வே ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு மன்றத்தின் காலியிடங்களை நிரப்புவதற்காக நேற்று (ஜூன் 17) நடத்தப்பட்ட தேர்தலில் நார்வே, அயர்லாந்து, கனடா ஆகிய மூன்று நாடுகள் 2 இடங்களுக்குப் போட்டியிட்டன. அந்த மன்றத்தில் உறுப்பினராவதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச வாக்குகளான 128 வாக்குகளைப் பெற்று தேர்வானது அயர்லாந்து. நார்வே 130 வாக்குகளுடன் தேர்வானது.

புவியியல் ரீதியான வட்டாரங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலியிடங்களுக்கு இந்தியாவும் மெக்சிகோவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டன.

இந்தியா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். “ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் இந்தியா உறுப்பினராக இருப்பதற்கு உலகளாவிய சமூகம் காட்டியுள்ள பெரும் ஆதரவுக்கு மிகுந்த நன்றி. உலகளாவிய அமைதி, பாதுகாப்பு, மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இந்தியா செயல்படும்,” என அவர் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

193 உறுப்பினர்களை கொண்ட இந்த மன்றம் வரும் அக்டோபர் மாதத்துடன் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவிருக்கிறது.

இந்தியாவுடன் அயர்லாந்து, மெக்சிகோ மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றன. கனடா தேர்தலில் தோல்வியடைந்தது.

15 உறுப்பினர் குழுவில் தற்காலிகமான 10 இடங்களில் ஐந்து இடங்களுக்கு நேற்று நடந்த தேர்தலில் பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா உட்பட நான்கு நாடுகள் 2021-22 காலக்கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இன்று நடைபெறும் தேர்தலில் ஆப்பிரிக்க வட்டாரத்துக்கான மற்றொரு காலியிடமும் நிரப்பப்டும் என்று கூறப்பட்டது.

நேற்று நடந்த தேர்தலில் புதிய பொதுக்குழு தலைவராக துருக்கியைச் சேர்ந்த பேராளர் வோல்கன் போஸ்கிர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய தலைவராக இருக்கும் நைஜீரிய பேராளார் டிஜ்ஜனி முகம்மது பாண்டேயிடமிருந்து வரும் செப்டம்பர் மாதத்தில் அவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!