உறவு கெடும்: சீனாவை இந்தியா எச்சரிக்கிறது

புது­டெல்லி: இந்­திய-சீன எல்­லை­யில் பதற்­றத்­தைக் குறைத்­துக் கொள்­ள­வேண்­டும் என்று இரு நாடு­க­ளுமே கருத்து தெரி­வித்து வரு­கின்­றன.

இருந்­தா­லும் கோப­மூட்­டும் செயல்­களில் சீனா ஈடு­பட்­டால் கடு­மை­யான விளை­வு­களை அந்த நாடு சந்­திக்க வேண்டி இருக்­கும் என்று இந்­தியா எச்­ச­ரித்­துள்­ளது.

லடாக் எல்­லைப் பகு­தி­யில் இரு நாட்டு ராணு­வத்­திற்­கும் இடை­யில் பதற்­றம் கூடி­யதை அடுத்து பல சுற்று பேச்­சு­வார்த்­தை­கள் நடந்­தன.

ஆனால் அங்­குள்ள கல்­வான் பள்­ளத்­தாக்­குப் பகு­தி­யில் இரு நாட்டு வீரர்­க­ளுக்­கும் இடை­யில் திங்­கட்­கி­ழமை திடீ­ரென மோதல் ஏற்­பட்­ட­தில் இந்­திய வீரர்­கள் 20 பேர் மர­ணம் அடைந்­த­னர்.

இந்­நி­லை­யில், கொவிட்-19 ஒழிப்பு முயற்­சி­யாக மாநில முதல்­வர்­க­ளு­டன் பேசிய பிர­த­மர் மோடி, இந்­தியா அமை­தியை விரும்­பும் நாடு என்­றா­லும் யாரா­வது சீண்டி னால் தக்க பதி­லடி கிடைக்­கும் என்று கூறி­னார்.

இத­னி­டையே, இரு நாட்டு ராணுவ அதி­கா­ரி­களும் நேற்­றும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர்.

இவ்­வே­ளை­யில், இந்­தி­யா­வில் சீனத் தயா­ரிப்­புப் பொருட்­க­ளைத் தவிர்த்­துக் கொள்­வ­தற்­கான முயற்சி­யாக, சீனா­வி­லி­ருந்து வரும் 500 வகை­யான பொருட்­க­ளைப் புறக்­க­ணிக்­கப் போவ­தாக அகில இந்­திய வர்த்­த­கர்­கள் கூட்­ட­மைப்பு (கெய்ட்) தெரி­வித்­தது.

சீனத் தயா­ரிப்­புப் பொருட்­களை பயன்­ப­டுத்த வேண்­டாம் என்று 4ஜி வச­தி­களை மேம்­ப­டுத்தி வரும் பிஎஸ்­என்­எல் நிறு­வ­னத்­தி­டம் இந்­திய தொலைத்­தொ­டர்­புத் துறை தெரி­வித்து இருக்­கிறது. இதே­போல் ரயில்வே துறை­யி­லும் முடிவு எடுத்துள்ளதாகத் தெரி­கிறது.

இவ்­வே­ளை­யில், கிழக்கு லடாக்­கின் கல்­வான் பள்­ளத்­தாக்­கில் தங்­க­ளுக்குப் பாத்­தி­யதை இருக்­கிறது என்று கூறும் சீனா­வின் பேச்சு மிகைப்­ப­டுத்­தப்­பட்­டது என்­றும் அது ஏற்­றுக்­கொள்ள முடி­யாத கூற்று என்­றும் மத்­திய வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­துவிட்டது.

இச்­சூ­ழ­லில், இந்­தி­ய அரசின் இணை­யத்தளங்­கள், ஏடி­எம் வங்கி அமைப்புகளைக் குறி­வைத்து சீனா வி­லி­ருந்து இணை­யத் தாக்குதல்கள் நடத்­தப்­பட்­டுள்ளதாக இந்­திய உள­வுத்­துறை எச்­ச­ரித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!