புதுடெல்லி சுகாதார அமைச்சர் உடல்நிலையில் முன்னேற்றம்

புதுடெல்லி சுகாதார அமைச்சர் உடல்நிலையில் முன்னேற்றம்

1 mins read
59372601-6baa-4c1c-857a-6b052584cb57
கொவிட்-19 கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட புதுடெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல்நிலையில் இப்போது முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். படம்: ஊடகம் -

புதுடெல்லி: புதுடெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெய்ன், கொரோனா கிருமித் தொற்றுக்காக மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் இப்போது முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர் காய்ச்சலும் சுவாசப் பிரச்சினையும் இருந்தால் நீண்ட நேரமாக அவருக்கு உயிர்வளி (பிராணவாயு) சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்றைய நிலவரப்படி அவரது காய்ச்சல் இறங்கியுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது டெல்லி போலிஸ். சத்யேந்தர் ஜெய்ன், முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலரோடும் பல கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டார். எனவே புதுடெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்குத் தொற்று இல்லை என்றாலும் அவர் சென்ற வாரம் தன் வீட்டில் தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டார்.