தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடல் நல்லடக்கம்

1 mins read
b0c91f76-beaa-4fc5-9c08-d9387b500666
இந்திய - சீன எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பஞ்சாப்பைச் சேர்ந்த வீரர் சட்னம் சிங்கும் ஒருவர். அவரது சொந்த ஊரான போஜ்ராஜ் கிராமத்தில் அவரது இறுதி ஊர்வலம் ராணுவ மரியாதையுடன் நடத்தப்பட்டது. படம்: இபிஏ -
multi-img1 of 3

ராம­நா­தபுரம்: எல்­லைப் பகு­தி­யில் சீன ராணு­வத்­து­டன் ஏற்­பட்ட மோத­லில் வீர­ம­ர­ணம் அடைந்த தமி­ழக வீரர் பழ­னி­யின் உடல் ராணுவ மரி­யா­தை­யு­டன் நல்­ல­டக்­கம் செய்­யப்­பட்­டது.

முன்­ன­தாக ராணுவ விமா­னம் மூலம் மதுரை வந்­த­டைந்த பழ­னி­யின் உட­லுக்கு மாவட்ட ஆட்­சி­யர் வினய் மல­ரஞ்­சலி செலுத்­தி­னார்.

வீர­ம­ர­ணம் அடைந்த வீரர் பழனி ராம­நா­த­பு­ரம் மாவட்­டம் கடுக்­க­லூர் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர். அவ­ரது உட­லுக்கு உற­வி­னர்­களும் அப்பகுதி மக்­களும் கண்­ணீர் அஞ்­சலி செலுத்­தி­னர்.

ராம­நா­த­பு­ரம் மாவட்ட ஆட்­சி­யர் வீர­ரா­கவ ராவ் நேரில் சென்று பழ­னி­யின் குடும்­பத்­தா­ருக்கு ஆறு­தல் தெரி­வித்­தார்.

பின்­னர் ராணுவ வாக­னத்­தில் ஏற்­றப்­பட்ட பழ­னி­யின் உடல் துப்­பாக்கி குண்­டு­கள் முழங்க ராணுவ மரி­யா­தை­யு­டன் நல்­ல­டக்­கம் செய்­யப்­பட்­டது.

பழ­னி­யின் சகோ­த­ரர் இதயக்கனியும் ராணு­வத்­தில்தான் பணி­யாற்­று­கி­றார். எல்­லைப் பகு­தி­யில் உள்ள இந்­திய வீரர்­களை தாம் தொடர்புகொண்டு பேசி­ய­தா­க­வும், அப்­போது எல்­லை­யில் ஓய்­வெ­டுத்­துக் கொண்­டி­ருந்த 150 இந்­திய வீரர்­கள் மீது சீன ராணு­வத்­தைச் சேர்ந்த ஆயி­ரம் பேர் திடீ­ரென கற்­கள் மற்­றும் கம்­பி­கள் கொண்டு தாக்­கு­தல் நடத்­தி­ய­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர் என்­றும் இத­யக்­கனி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

பழனியின் மறைவால் கடுக்கலூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.