புதிய தொடக்கத்துக்கு இதுவே சிறந்த நேரம் என்கிறார் பிரதமர்

புதிய தொடக்கத்துக்கு இதுவே சிறந்த நேரம் என்கிறார் பிரதமர்

1 mins read
9a4949e8-82fb-4d58-8bcc-9a4c8517ad0a
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் நுகர்­வும் தேவை­யும் கொரோனா பாதிப்­புக்கு முன்பு இருந்த நிலையை நோக்கி வேக­மாக முன்­னேறி வரு­வ­தா­கப் பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

புதிய தொடக்­கத்­துக்கு இதை விட சிறந்த நேரம் இருக்க முடி­யாது என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

நாட்­டில் உள்ள 41 நிலக்­கரி சுரங்­கங்­களை தனி­யா­ருக்கு ஏலம் விடும் நிகழ்ச்­சி­யில் கலந்துகொண்டு பேசிய அவர், தற்­போ­துள்ள சூழ்­நிலை­களை வைத்துப் பார்க்­கும் போது, இந்­திய பொரு­ளா­தா­ரம் மீண்­டும் எழுச்சி பெறத் தயா­ராக இருப்­பது தெளி­வா­கத் தெரி­கிறது என்­றார்.

"பல ஆண்­டு­க­ளாக கட்­டுப்­பாட்­டில் இருந்த நிலக்­கரித் துறையை அதில் இருந்து வெளியே கொண்டு வந்து இருக்­கி­றோம். இந்­தச் சீர்திருத்த நட­வ­டிக்­கை­யின் மூலம் நிலக்­கரி உற்­பத்­தி­யும் நிலக்­கரி துறை­யும் தன்­னி­றை­வைப் பெறும்," என்­றார் பிர­த­மர் மோடி.

இயற்கை வளங்­களும் சுரங்­கத் தொழி­லும் இந்­தி­யப் பொரு­ளா­தா­ரத்­தின் முக்­கி­ய­மான தூண்­கள் என்று குறிப்­பிட்ட அவர், உல­கில் நிலக்­கரி வளத்­தில் இந்­தியா 4ஆவது இடத்­தி­லும், உற்­பத்­தி­யில் 2ஆவது இடத்­தி­லும் இருப்­ப­தா­கச் சுட்­டிக்­காட்­டி­னார்.

"ஆனால் நாம் நிலக்­க­ரியை ஏற்­று­மதி செய்­ய­வில்லை. உல­கி­லேயே நிலக்­க­ரியை அதி­க­மாக இறக்­கு­மதி செய்­யும் நாடு­க­ளின் பட்­டி­ய­லில் இந்­தியா 2ஆவது இடத்­தில் உள்­ளது.

"அடுத்த 5 முதல் 7 ஆண்­டு­களில் நிலக்­கரி சுரங்­கத் தொழி­லில் ரூ.33 ஆயி­ரம் கோடி முத­லீடு செய்­யப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. நிலக்­கரிச் சுரங்­கங்­கள் மூலம் மாநில அர­சு­க­ளுக்கு ரூ.20 ஆயி­ரம் கோடி வரு­மா­னம் கிடைக்­கும்," என்று பிர­த­மர் மோடி தெரி­வித்­தார்.