உலகப் பணக்காரர் ஆன முகேஷ் அம்பானி

உலகப் பணக்காரர் ஆன முகேஷ் அம்பானி

1 mins read
dd49800b-cafd-476a-9bb5-cdb2312d894b
-

புதுடெ ல்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்து வந்த நிலையில், தற்போது உலகின் முதல் 10 மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை இழந்தும், தொழில்களில் இழப்பை சந்தித்தும் வரும் நிலையில் முகேஷ் அம்பானியின் சொ த்து மதிப்பு உயர்ந்துள்ளது. அவரது நிறுவனங்களும் செழிப்பாக முன்னேறி வருகின்றன.

முகே ஷ் அம்பானியின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 64.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து 'ப்ளூம்பர்க்' பணக்காரர்கள் பட்டியலில் உலகின் பெரிய 10 பணக்காரர்களில் ஒருவராக அவர் இடம்பெற்றுள்ளார். உலகப் பணக்காரர்களின் பட்டியலில் ஆசியாவிலிருந்து இடம்பெற்றுள்ள முதல் தொழிலதிபர் முகேஷ் அம்பானிதான்.

ஆரக்கிள் நிறுவனத்தின் லாரி எல்லிசன், பிரான்ஸின் பெட்டென்கொர்ட் மேயர்ஸ் போன்ற ஜாம்பவான்களையும் முந்தி முகேஷ் அம்பானி 9ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.