பெங்களூரு: வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்காக 'சேவா சிந்து' என்ற செயலியை கர்நாடக அரசு அறிமுகம் செய்துள்ளது. அப்படி வருவோர் மூன்று நாட்களுக்கு அரசு கண்காணிப்பு மையத்தில் தங்க வைக்கப்படுவார்கள். இந்நிலையில் ஓசூர் எல்லை பகுதியான ஜூஜூவாடியில் இருந்து கர்நாடகாவின் எல்லைப் பகுதிக்கு நடந்து சென்றவர்களை கர்நாடக போலிசார் தடுத்து நிறுத்தி தமிழகத்திற்கே திரும்பிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டதால் அவர்களை அப்புறப்படுத்த போலிசார் தடியடி நடத்தினர்.
கர்நாடகத்திற்குள் நுழைந்தோர் மீது போலிஸ் தடியடி
1 mins read
கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் மகளிர் காவல்துறையினர் முகக்கவசம், கையுறையுடன் அணிவகுத்துச் செல்கின்றனர். முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக அவர்கள் கடந்த வியாழக்கிழமையை 'முகக்கவச தின'மாகக் கடைப்பிடித்தனர். படம்: இபிஏ -

