சீனப் பொருட்கள் புறக்கணிப்பு எளிதல்ல - குமா­ர­சாமி

சீனப் பொருட்கள் புறக்கணிப்பு எளிதல்ல - குமா­ர­சாமி

1 mins read
37812ef2-0442-4ef0-a1d6-784b08e070c8
உரிய மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்திவிட்டுதான் சீனத் தயாரிப்புப் பொருட்களைப் புறக்கணிக்க முடியும் என்று கூறியுள்ளார் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி. கோப்புப்படம் -

புது­டெல்லி: சீனத் தயாரிப்புப் பொருட்­க­ளைப் புறக்­க­ணிப்­ப­தற்கு முன்பு மத்­திய அரசு உரிய திட்­டங்­களைச் செயல்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­யம் என்று கர்­நா­டக முன்­னாள் முதல்­வர் குமா­ர­சாமி தெரி­வித்­துள்­ளார்.

உள்­ளூர் மக்­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­திக் கொடுப்­பது, சீனப் பொருட்­க­ளுக்கு கிடைக்­கும் சந்தை வாய்ப்­பைப் பறித்து உள்­நாட்டு உற்­பத்­திப் பொருட்­க­ளுக்கு வழங்­கு­வது ஆகி­ய­வையே தமது தலை­மை­யில் இருந்த முந்­தைய அர­சின் நோக்­க­மாக இருந்­தது என அறிக்கை ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

சீனப் பொருட்­க­ளைப் புறக்­க­ணிப்­பது அவ்­வ­ளவு எளி­தா­னது அல்ல என்­றும் அவர் சுட்­டிக் காட்­டி­யுள்­ளார்.

"ஆனால், நான் அறி­வித்த திட்­டத்தை அமல்­ப­டுத்த இன்­றைய பாஜக அரசு ஏதே­னும் நட­வ­டிக்கை எடுத்­ததா என்­பது எனக்­குத் தெரி­யாது. நமது எல்­லை­யில் சீனா தாக்­கு­தல் நடத்­திய பிற­கு­தான் சில­ருக்கு சீனப் பொருட்­க­ளைப் புறக்­க­ணிக்க வேண்­டும் எனும் திடீர் ஞானோ­த­யம் வந்­துள்­ளது," என்று குமா­ர­சாமி கூறியுள்ளார்.