4.25 லட்சம் பேர் பாதிப்பு: 13,699 பேர் உயிரிழப்பு

4.25 லட்சம் பேர் பாதிப்பு: 13,699 பேர் உயிரிழப்பு

1 mins read
868de165-2dae-4ab1-b4be-64b7f785f13b
குஜராத்தில் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. படம்: தகவல் ஊடகம் -

புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்று அதிகரித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் இந்தியாவில் 445 பேர் கொவிட் 19 நோய்க்குப் பலியாகி உள்ளனர்.

கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4.25 லட்சத்தைக் கடந்துள்ளது. எனினும் 2.37 லட்சம் பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 14,821 பேருக்கு நோய் தொற்றியது உறுதியானது. நாடு முழுவதுக்குமான மொத்த பலி எண்ணிக்கை 13,699 ஆக உள்ளது.

டெல்லியில் சுமார் 60 ஆயிரம் பேரும் குஜராத்தில் சுமார் 27 ஆயிரம் பேரும் கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா கிருமி தொற்றி உள்ளது. கொரோனா கிருமித் தொற்று பரவல் அதிகரித்திருந்தாலும் அது இன்னும் சமூகத்தொற்றாக மாறவில்லை என மத்திய அரசும் சில மாநில அரசுகளும் தெரிவித்து வருகின்றன. எனினும் கிருமித் தொற்று உச்சத்தை நெருங்கி வருவதாக மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.