போபாலில் கொவிட்-19ஆல் உயிரிழந்தவர்களுள் 74 விழுக்காட்டினர் விஷவாயு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள்: ஆய்வு

இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநில தலைநகர் போபாலில் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களில் 74 விழுக்காட்டினர் 1984ஆம் ஆண்டு நிகழ்ந்த போபால் விஷவாயு கசிவில் பாதிக்கப்பட்டு உயிர்தப்பியவர்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இம்மாதம் 11ஆம் தேதி வரையிலான தரவுகளின்படி போபால் நகரில் 60 பேர் கொரோனா கிருமித் தொற்றால் உயிரிழந்தனர். அதில் 48 பேர் போபால் விஷவாயுக் கசிவில் சிக்கி உயிர்தப்பியவர்கள் என தொண்டுநிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்த ஆய்வு அறிக்கையை அந்த மாநில முதல்வர் சிவராஜ் சவுகானுக்கு அந்த தொண்டுநிறுவனம் அனுப்பியுள்ளது.

1984ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி இரவில், போபாலில் யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் நடந்த விபத்தால் கசிந்த விஷவாயு அப்பகுதியில் பரவியதால் 3500க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

அந்தச் சம்பவத்தில் சுமார் ஐந்து லட்சம் மக்களின் கை, கால்களை இழந்தனர்.

விபத்து நடந்து 35 ஆண்டுகள் கடந்தும், ஏறக்குறைய மூன்றாவது தலைமுறையும் கடுமையாக பாதிக்கப்பட்டு பல குழந்தைகள் கோரமாகவும், பல்வேறு பிறவி குறைபாடுகளுடனும் பிறப்பதை அண்மையில் வெளிவந்த மருத்துவ ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்தது.

கடும் நச்சுத்தன்மை மிகுந்த மீதைல் ஐசோசயனைட் வாயு, சுமார் 40 டன் அளவுக்கு கசிந்ததுதான் இந்த மோசமான விபத்துக்கு காரணம்.

அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு அண்மையில் பிறந்த பேரக்குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

போபால் விஷவாயு கசிவில் தப்பித்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறந்த குழந்தைகள் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்திருந்ததால், அவர்கள் கொரோனாவுக்கு எளிதில் இலக்காகும் சாத்தியம் அதிகம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘போபால் குரூப் ஃபார் இன்ஃபர்மேஷன் அன்ட் ஆக்‌ஷன்’ (BGIA) எனும் அமைப்பின் நிறுவனர் ரச்சனா திங்ரா, “கொரோனா கிருமியால் போபால் நகரில் உயிரிழந்த 60 பேரில் 48 பேர் போபால் விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையால் உயிர்தப்பியவர்கள். இந்த 48 பேரில் 3 பேர், போபால் விஷவாயுக் கசிவில் உயிர்தப்பிய பெற்றோருக்கு பிறந்தவர்கள். அந்த 3 பேருக்கும் 35 வயதுக்குள்ளாகவே இருக்கும்,” என்று கூறியுள்ளார்.

போபால் விஷவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்திதிறன் குறைந்துவிட்டது என்றும் அவர்களுக்குபிறந்த குழந்தைகளுக்கும், பேரக்குழந்தைகள் வரை இந்த பாதிப்பு தொடர்ந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயிரிழந்த 48 பேரில் 81 சதவீதம்பேருக்கு நீண்டகால நோய்கள் இருந்து வந்துள்ளன. அதாவது நீரிழிவு, இருதய நோய், ரத்தக்கொதிப்பு போன்றவற்றுக்கு மருந்துகள் உட்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரத்துக்குள் உயிரிழந்த 19 பேரில் 16 பேர் போபால் விஷவாயு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போபாலில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள், ஆரம்பகால அறிகுறிகளைப் புறக்கணித்துவிட்டு, நிலைமை மிகவும் மோசமான பிறகே மருத்துவமனைகளை நாடுவதாக அம்மாநிலத்தின் கொவிட்-19 மேலாண்மைக் குழு உறுப்பினர் லோகேந்திர தேவ் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!