இந்தியாவில் தான் 'கொவிட்-19' இறப்பு விகிதம் மிகக்குறைவு

இந்தியாவில் தான் 'கொவிட்-19' இறப்பு விகிதம் மிகக்குறைவு

1 mins read
89e1d717-9054-4110-972b-7f82a50a9fd3
புதுடெல்லியில் கொரோனா கிருமித்தொற்று நோயாளிகள் தனிமைப்படுத்தப்படும் நிலையம். படம்: இபிஏ -

புது­டெல்லி: உல­க­ள­வில் கொவிட்-19 இறப்பு விகி­த­மா­னது இந்­தி­யா­வில்­தான் மிகக் குறைவு என்று மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் லட்­சம் பேருக்கு ஒரு­வர் மட்­டுமே உயி­ரி­ழக்­கி­றார். உல­க­ள­வில் லட்­சத்­துக்கு 6 பேர் இறக்­கின்­ற­னர்.

இந்­தி­யா­வை­விட உல­க­ள­வில் இறப்பு விகி­தம் 6 மடங்கு அதி­க­மாக உள்­ளது என்று குறிப்­பிட்­டுள்ள மத்­திய சுகா­தார அமைச்சு, மத்­திய, மாநில அர­சு­கள் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­களே இறப்பு விகி­தம் குறை­வாக இருக்கக் கார­ணம் எனத் தெரி­வித்­துள்­ளது.

மேலும் கொவிட் 19 நோயி­லி­ருந்து குண­ம­டை­ப­வர்­க­ளின் விகி­த­மும் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தாக குறிப்­பிட்­டுள்ள அந்த அமைச்சு, குண­ம­டை­யும் விகி­தம் தற்­போது 56.38 விழுக்­கா­டாக உள்­ளது எனத் தெரி­வித்­துள்­ளது.

நாடு முழு­வ­தும் இது­வரை 2,48,189 நோயா­ளி­கள் குண­ம­டைந்­துள்­ள­னர். சுமார் 1.78 லட்­சம் பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

"நோய்த்­தொற்­றுப் பர­வ­லைத் தடுத்­தல், தனி­மைப்­ப­டுத்­து­தல், மேலாண்மை செய்­தல் ஆகி­ய­வற்றை மாநில அர­சு­க­ளோடு சேர்ந்து மத்­திய அர­சும் மேற்­கொண்டுள்ளது.

"இத்­த­கைய சீரான நடை­முறை, முன்­கூட்­டியே செயல்­ப­டு­ம் முறை, தாமே முன்­வந்து செயல்­படும் அணுகு­முறை ஆகி­ய­வையே இறப்­பு­க­ளின் எண்­ணிக்கை குறை­வாக இருக்கக் கார­ணம் என்­றும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.