மும்பை: மகாராஷ்டிராவில் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1.39 லட்சமாக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அங்கு புதிதாக 3,214 பேருக்குக் கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6,531 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்குவங்கம்: பள்ளி, கல்லூரிகள் மூடல்
கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் ஜூலை 31ஆம் தேதி வரை மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. அங்கு கொவிட்-19 பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரை 569 பேர் பலியாகி உள்ளனர்.
கர்நாடகா: 154 பேர் உயிரிழப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மேலும் 8 பேர் உயிரிழந்தனர். பலியானோர் மொத்த எண்ணிக்கை 154ஆக அதிகரித்துள்ளது. 9,567 பேர் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

