நாடெங்கும் கிருமிப் பரவலால் 4.73 லட்சம் மக்கள் பாதிப்பு

1 mins read
bd677ce9-15b4-4a91-a197-7f86c65fa4ed
மகா­ராஷ்டிராவில் 1,42,900 பேருக்கும் டெல்லியில் 70,390 பேருக்­கும் தமி­ழ­கத்­தில் 67,468 பேருக்­கும் குஜ­ராத்­தில் 28,943, ராஜஸ்­தா­னில் 16,009, மத்­தியப் பிரதேசத்­தில் 12,448 பேருக்­கும் கொவிட்-19 தொற்று பாதித்துள்ளது என்று சுகா­தா­ரத்துறை வெளி­யிட்­டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொவிட்-19 கிரு­மித்தொற்று தொடர்ந்து ஏறு­மு­கம் கண்டு வரு­கிறது. தின­மும் ஐந்து இலக்­கத்­தில் இந்த பாதிப்பு பதி­வாகி வரும் நிலையில், அன்றா டம் கிருமிப் பர­வ­லும் உயி­ரி­ழப்­பும் அதி­க­ரிப்பது மக்­கள் மத்­தி­யில் அச்­சத்தை ஏற்­படுத்தி உள்­ளன.

இந்த ­கிருமி பாதிப்பு குறித்து மத்­திய சுகா­தா­ரத்துறை வெளி­யிட்­டுள்ள அறிக்கையில், "இந்­தி­யா­வில் இது­வரை இத்தொற்றால் 4,73,105 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

"கடந்த புத­னன்று மட்­டும் 16,922 பேருக்கு இத்­தொற்று இருப்பது உறுதியானது. 418 பேர் மர­ணம் அடைந்த நிலையில், இவர்களையும் சேர்த்து இத்தொற்­றால் உயிரி ழந்தோர் எண்ணிக்கை 14,894 பேராக அதிகரித்துள்ளது. உயிரி ழப்பு விகி­தத்தில் இது 3.2% ஆகும்.

"இது­வரை 2,71,697 பேர் இந்த கிருமி பாதிப்­பில் இருந்து குணம டைந்­துள்­ள­னர். குண­ம­டை­யும் விகி­தம் 57.4% ஆக உயர்ந்­துள்­ளது. நாடு முழு­வ­தி­லும் உள்ள பல்­வேறு மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் 1,86,514 பேர் சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்­ற­னர்.

"அதி­க­பட்­ச­மாக மகா­ராஷ்டிராவில் 1,42,900 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. டெல்லியில் 70,390 பேருக்­கும் தமி­ழ­கத்­தில் 67,468 பேருக்­கும் குஜ­ராத்­தில் 28,943, ராஜஸ்­தா­னில் 16,009, மத்­தியப் பிரதேசத்­தில் 12,448 பேருக்­கும் இத்தொற்று உள்­ளது," என்று குறிப்பிட்டுள்ளது.

உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட மொத்த தொற்­றுச்­ சம்பவங்க­ளின் அடிப்­ப­டை­யில் அமெ­ரிக்கா, பிரே­சில், ரஷ்யா ஆகிய நாடு­க­ளுக்கு அடுத்த நிலை­யில் இந்­தியா உள்­ளது. ஆசி­யா­வில் கிரு­மித்­தொற்று பரவலின் மிகப்­பெ­ரிய மைய­மா­க­வும் உல­கின் நான்­கா­வது மோச­மான பாதிப்­புக்­குள்­ளான நாடா­க­வும் இந்­தியா உரு வெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.